புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலையத்தின் நிர்வாக அலகு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட நிதிமுகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் நட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர்அருட்தந்தை போல் றொகான், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன், அகவொளி நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் மற்றும் மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.