புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
06ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழாவும் 15ஆம் திகதி திருவிழாவும் இடம்பெற்றன.
திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin