புங்குடுதீவு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குதந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 13 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி புங்குடுதீவு சத்திரங்கிணத்தடி
பகுதியை சிரமதான பணிமூலம் துப்பரவு செய்தார்கள்.