யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிறிகேடியர் அமரர் அண்டனி டேவிட் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற அழகியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஞ்சலி நிகழ்வும் நினைவு மலர் வெளியீடும் இடம்பெற்றன.

பிறிகேடியர் அண்டனி டேவிட் நிதியத்தின் மூலமாக யாழ். மறைமாவட்டத்தின் பல கல்வி நிறுவனங்கள் ஊடாக ஏராளமான மாணவர்கள் உதவி பெற்று வருகின்றனர்.

குறிப்பாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, புனித மடுத்தீனார் சிறிய குருமடம், புனித யாகப்பர் ஆலயம், திருக்குடும்ப கன்னியர் சபை, வெண்புரவிநகர் பாலர் பாடசாலை ஆகியவற்றில் கல்விகற்கும் ஏராளமான மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்நிதியத்தினால் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் குருக்கள் துறவிகள் நிதியத்தின் பங்காளிகள், பயனாளிகளென பலரும் கலந்து கொண்டனர்.

By admin