கிளிநொச்சி பல்லவராயங்கட்டு புனித டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பாடசாலைக்கான புதிய கட்டடத்திறப்புவிழா 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலை இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய கட்டடத்தை ஆசீர்வதிக்க கட்டத்திற்கான நிதி அனுசரணை வழங்கிய இத்தாலி நாட்டை சேர்ந்த கலாநிதி திரு. சான்றோ வெரோனிசி அவர்கள் அதனை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை சலேசிய உப மாகாணத்தின் தலைவர் அருட்தந்தை ரொசான் மிரண்டா, உப தலைவர் அருட்தந்தை போல் சஜீவக்க, ஒமேகா நிறுவன தலைவர் திரு. ஜோபொல்லோ வின்சென்சொ, அருட்சகோதரன் காபெரியல் மற்றும் அயற் பாடசாலை அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகஸ்தர்கள், தொழிற்கல்வி மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.
டொன்பொஸ்கோ school of Excellence 2018 ஆம் ஆண்டு பல்லவராயன் கட்டில் ஆரம்பிக்கப்பட்டது. தரம் 1முதல் க.பொ.த சாதாரண தரம்வரை கற்றல் செயற்பாடுகளுக்கான வசதிகளை கொண்டுள்ள இப்பாடசாலையில் தரம் 1முதல் தரம் 6 வரை தற்போது 130 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.