குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மாதகல் புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது.
குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 80 வரையான பிள்ளைகள் மதாகல் புனித லூர்து அன்னை கெபிக்கு சென்று அங்கு முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் பங்குபற்றினர்.