கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கல்லூரி முதல்வர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் தலைமையில் கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் கிறிஸ்தவ மன்ற பொறுப்பாசிரியர் திரு. டனிஸ் சத்தியசீலன் மற்றும் அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ் ஆகியோரின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன் 2023 கத்தோலிக்க திருமறைத்தேர்வில் விசேட சித்திபெற்ற மற்றும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
புலோப்பளை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் திருச்சிலுவை சுகநல நிலைய தாதியர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி ஜெரால்டின் மைக்கல் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், அயற்பாடசாலை
அதிபர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.