பல்லவராயங்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தால் பூநகரி பிரதேச இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் டொன் பொஸ்கோ மைதானத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரன் ரொனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் பூநகரி பிரதேசத்தை சேர்ந்த 10க்கும் அதிகமான அணிகள் பங்குபற்றியிருந்தன.