வணக்கமாத இறுதிநாளை சிறப்பித்து பலாலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பவனி கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி வளலாய் புனித மடுமாதா ஆலயத்தில் ஆரம்பமாகி பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலியை செபமாலைதாசர் சபை அருட்தந்தை நிர்மல்ராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.