பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஞாயிறு மறைப்பாடசாலை கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.