வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மாகாண கல்வி அமைச்சின் செயலர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துறை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறந்த நூல்களின் 14 நூலாசிரியர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களுக்கு வரலாறு மற்றம் தொல்லியல் துறையில் – போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் கத்தோலிக்கம் என்ற நூலுக்கும், யாழ். மாகாண அமல மரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை டேவிட் வின்சன் பற்றிக் அவர்களுக்கு மொழி பெயர்ப்பு துறையில் அன்பின் உட்குரல் என்ற நூலுக்கும், யாழ். பல்கலைகழக கிறிஸ்தவ நாகரீகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் மேரிவினிபிரிடா சுரேந்திரராஜ் அவர்களுக்கு ஆய்வுகள் துறையில் திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சிற்ப கட்டடக் கலைகள் என்ற நூலுக்குமான சிறந்த நூற்பரிசு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

By admin