பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரெட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கிறிஸ்மஸ் செய்தியை வழங்கியதுடன் சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.