நெடுந்தீவு பங்கிற்குட்பட்ட கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 26ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்த நாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றுது. திருநாள் திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு பீமன் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். இவ் வழிபாடுகளில் கற்கடதீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் நெடுந்தீவு மண்டைதீவு குருநகர், மன்னார் ஆகிய பிரதேசங்களிலிருந்து வருகைந்த மக்களும் கலந்துகொண்டனர்.