இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய தேர்வின் 2023ஆம் ஆண்டிற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 285 மாணவர்கள் தேர்ச்சி பெற்றமைக்கான சான்றிதழ்களையும் 156 மாணவர்கள் பங்குபற்றியமைக்கான சான்றிழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் 47 மாணவர்கள் தங்கப்பதக்கத்தையும் 95 மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தையும் 143 மாணவர்கள் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.