தீவக மறைக்கோட்டத்தில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது.
சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகரும் மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளருமான அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மறையாசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவற்பிள்ளை டேவிட் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ மற்றும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் இயக்கச்சி அமதிகளின் நேசக்கரங்கள் பணியக இயக்குநர் அருட்சகோதரர் தெரஸ் புஸ்பம் ஜெனிஸ்ரன் பெனடிக்ற் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்டத்தில் பணியாற்றும் 70ற்கும் அதிகமான மறையாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin