அமரர் கஸ்பார் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் “திருமறைக் குறள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது.
பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இந்நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலைமுகம் சஞ்சிகை ஆசிரியர் திரு. செல்மர் எமில் அவர்;கள் கலந்து சிறப்பித்ததுடன் இந்நூலுக்கான மதிப்பீட்டு உரையை உடுவில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் அமரர் கஸ்பார் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் குடும்ப உறுப்பினர்களெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அமரர் கஸ்பார் பஸ்தியாம்பிள்ளை அவர்களினல் எழுதப்பட்ட இந்நூல் அவரது மறைவுக்குபின் அவரின் பிள்ளைகளால் வெளியிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.