யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமண பந்தத்தில் இணையவுள்ளவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திருமண ஆயத்த வகுப்புக்கள் கடந்த 21, 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது.
அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வகுப்புக்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு மறைக்கோட்டங்களைச் சேர்ந்த பலர் பங்குபற்றி பயனடைந்தனர்.