முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பாலர் மற்றும் பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் இவ்வாரத்தில் நடைபெற்றுள்ளன.
திருப்பாலத்துவ சபை சிறார்களுக்கான நிகழ்வில் உரும்பிராய் பங்கு திருப்பாலத்துவ சபை பிள்ளைகள் கள அனுபவ விஜயம் மேற்கொண்டு அளம்பில் சிறார்களை சந்தித்து இந்நிகழ்வை முன்னெடுத்திருந்தார்கள். கடந்த 06ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் 175 சிறார்கள் பங்குபற்றியதுடன் உரும்பிராய் பங்குத்தந்தை அருட்திரு அருட்செல்வன் அவர்கள் இந்நிகழ்வiனை ஒழுங்கு செய்திருந்தார். அத்துடன் பீடப்பணியாளர்களுக்கான நிகழ்வு கடந்த 8ஆம் திகதி இங்கு நடைபெற்றது. இந்நிகழ்வு எழுவைதீவு பங்கு பீடப்பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டதுடன் எழுவைதீவு பங்குத்தந்தை அருட்திரு அலின் கருணாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இது நடைபெற்றது.