திருப்பாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டதன் 180ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 02ஆம் திகதி சனிக்கிழமை குருநாகல் மறைமாவட்டத்திலுள்ள புனித அன்னான் திருத்தலத்தில் நடைபெற்றது.
திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குநர் அருட்தந்தை பசில் றொகான் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடும் சிறார்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறாயன் உடேக்குவே அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர்கள், திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள், அங்கத்தவர்களென 6000 வரையானவர்கள் கலந்து கொண்டதுடன் யாழ். மறைமாவட்டதிலிருந்து மறைமாவட்ட திருப்பாலத்துவசபை இயக்குநர் அருட்தந்தை றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 60ற்கும் மேற்பட்ட சிறார்களும் ஊக்குவிப்பாளர்களும் கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.