தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு பங்கில் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவசபை சிறார்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்று கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு விமலசேகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அப்பங்கினைச் சேர்ந்த 142 சிறார்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் சிறார்களுக்கான கருத்தமர்வும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.