முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தை சேர்ந்த இளையோர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.
மாங்குளம் டொன்பொஸ்கோ சலேசிய சபை குருக்களான அருட்திரு செபஞானம், அருட்திரு டிலான் ஆகியோர் நெறிப்படுத்திய இக்கருத்தரங்கில் பல இளையோர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். இந்நிகழ்வு புதுக்குடியிருப்பு பங்குதந்தை அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஓழுங்கு படுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.