தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு மக்களுக்கான மருத்துவ ஆலோசனை வழிகாட்டல் கருத்தமர்வு மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனை நிகழ்வுகள் 10ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை தர்மபுரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை கண்டாவளை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தி கமலசிங்கம் அவர்களின் தலைமையிலான குழுவினர் நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான பங்குமக்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin