தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப் பணிமனைக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் கலந்து புதிய பங்குப் பணிமனைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
வன்னிப்பிரதேசத்தில் நடைபெற்ற நீண்டகால யுத்தத்தில் இப்பங்குப் பணிமனை பல தடவைகள் சேதத்திற்குள்ளாகி யுத்தத்தின் இறுதியில் முற்றாக அழிவுற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.