யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2025ஆம் கல்வியாண்டிற்குரிய தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2020ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலமெனவும் விண்ணப்ப படிவங்களை கல்லூரி நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை கல்லூரியின் பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூரணப்படுத்திய விண்ணப்ப படிவத்துடன் பிறப்புச்சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை இணைத்து ஆவணி மாதம் 16ஆம் திகதிக்கு முன்பாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மாணவர்களுக்கான அனுமதிப்பரீட்சை ஆவணி மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.