தவக்காலத்தை முன்னிட்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றிவேள் மற்றும் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசசபை கலாச்சார உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் 35 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin