யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் ஓழுங்குபடுத்தலில் யாழ். கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட செயற்பட்டுமகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி 26ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
தரம் 3,4,5 பிரிவு ஆண்களுக்கான போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் 3தரங்களிலும் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலை பெண்களுக்கான போட்டியில் – 3ஆம் தரத்தில் இரண்டாம் இடத்தினையும் 4ஆம் தரத்தில் முதலாமிடத்தினையும் 5ஆம் தரத்தில் இரண்டாமிடத்தனையும் பெற்றுக்கொண்டது.