நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த சிறிய லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய 19ஆவது தமிழர் திருயாத்திரை கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்றைய நாளில் காலை 11 மணிக்கு சிறப்பு நற்கருணை வழிபாடும் மதியம் 1 மணிக்கு புனித கன்னிமரியாவின் பிறப்புவிழா திருப்பலியும் இடம்பெற்றன.
திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் புலம்பெயர் தேசத்திலுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.