இரணைத்தீவில் அமைந்துள்ள சின்னத்தீவு புனித செபஸ்ரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 28ஆம் 29 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
நற்கருணை விழா மற்றும் திருவிழா திருப்பலிகள் அமலமரி தியாகிகளின் சபையை சேர்ந்த அருட்தந்தை அருட்திரு யேசுபாலன் அவர்களின் தலைமையில் அங்கு நடைபெற்றன. இத்திருவிழா திருப்பலியில் 500க்கும் அதிகமாக இறைமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகள் யாவும் பங்குதந்தை அருட்திரு பத்திநாதர் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.