யாழ். புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்து, கடந்த நான்கு வருடகாலத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தையர்கள் ஒன்றிணைந்து குருத்துவக் கல்லூரியில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுத்த நிகழ்வு 19ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வு கொவிட் பெருந்தொற்று போன்ற காரணிகளால் பல வருடங்களின் பின் இடம்பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் அன்னை திரேசா சமூக சேவைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாமும் அன்றைய தினம் மதியம் அங்கு நடைபெற்றுள்ளது.
குருமட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் குருமட மாணவர்கள் குருக்களென 27 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.