கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா 04ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களை சேர்ந்த குருக்கள், அருட்சகோதரிகள், குருமடமாணவர்கள், ஆசிரியர்கள் பணியாளர்களென பலரும் கலந்து செபித்தனர்.
திருப்பலியை தொடர்ந்து இவ்வருடம் குருத்துவ யூபிலியை கொண்டாடும் குருக்களுக்கான கௌரவிப்பும் தொடர்ந்து தோழமை விருந்தும் நடைபெற்று மாலை விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.