கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றுவரும் அன்பிய எழுச்சி நிகழ்வின் ஒரு செயல்பாடாக முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொழும்புத்துறை பங்கிலிருந்து சாட்டி திருத்தலத்திற்கு களப்பயணம் மேற்கொண்ட மாணவர்களும் மறையாசிரியர்களும் அங்கு நடைபெற்ற பாசறை நிகழ்வில் பங்குபற்றினர்.
கிளறேசியன் அருட்தந்தையர்கள் வளவாளர்களாக கலந்து வழிப்படுத்திய இப்பாசறை நிகழ்வில் கருத்துரை குழு விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 45 வரையான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து பயனடைந்தனர்.