குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பன் இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் குருநகர் புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள “புனித யாகப்பர்” மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
இவ்வழிபாடுகளில் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகைதந்த ஏராளாமான மக்களும் கலந்துகொண்டனர்.