திருகோணமலை மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மையத்தால் மறைமாவட்ட பங்கு பாடகர் குழாமினருக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடர்பாடல் மைய இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட மேய்ப்புப்பணி சபை பணியகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக இடம்பெற்ற இப்போட்டியில் 13 குழுக்கள் பங்குபற்றியிருந்தன.
தமிழ் மொழி மூலமான போட்டியில் பாளையூர் புனித லூர்த்து அன்னை ஆலயம் முதலாமிடத்தையும் புனித மரியாள் போராலயம் இரண்டாமிடத்தையும் குவாடலூப் அன்னை ஆலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் சிங்கள மொழி மூலமான போட்டியில் ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி ஆலயம் முதலாமிடத்தையும் சைனா பாய் புனித அந்தோனியார் ஆலயம் இரண்டாமித்தையும் பெற்றுக்கொண்டன.

By admin