பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை அச்சுவேலி அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து ‘கூட்டொருங்கியக்கமும் கிறிஸ்து பிறப்பு விழாவும்’ என்னும் தலைப்பில் கருத்துரையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 50 வரையான குருக்கள், துறவிகள் பங்குபற்றியிருந்தனர்.

By admin