கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியாக முன்னெடுக்கபப்ட்ட விவிலிய வினாவிடை மற்றும் கட்டுரைப்போட்டிகள் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றன.
யாழ். மறைமாவட்டதில் மறைக்கல்வி நிலையத்தின் உதவியுடன் நான்கு இடங்களில் நடைபெற்ற இப்பரீட்சைகளில் 500ற்கும் அதிகமான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்.