திருமறைக்கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குனர் அமரர் அருட்திரு நீ .மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள் ஓரு பன்முகப்பார்வை என்னும் தலைப்பில் மெய்நிகர் வழியில் சூம் செயலியினூடாக திருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகின்ற ஆய்வரங்கத்தொடரின் 10வது தொடர் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரிய சேவியர் அவர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் யாழ். பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆசிரியர் குகபரன் அவர்கள் ஆய்வினை வழங்கினார்.