கனடா மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள சிறுவர் மற்றும் இளையோரை இணைத்து முன்னெடுத்த ஒளிவிழா மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களின் தலைமையில் கடந்த 7ம் திகதி சனிக்கிழமை Mary Queen of Hearts Sanctuary ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
மொன்றியல் அகுன்ஸ்ரிக் கார்ற்றிவெல (Montreal Ahuntsic-cartierville) மேயர் எமிலி துய்லியர் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் நடனம், நாட்டிய நடனங்கள், அபிநய நடனங்கள், வில்லுப்பாட்டு, நத்தார் பாடல்கள் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஓளிவிழாவையொட்டி நடாத்தப்பட்ட ஓவியம் பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
கலை நிகழ்வுகளில் சிறப்பு நிகழ்வாக புனித திருமுழுக்கு யோவான் நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.
தேசம் கடந்தாலும் தேன்தமிழோடு தவழும் மறைத்தள ஒளிவிழா நிகழ்வில் குருக்கள், அருட்சகோதரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள், பங்குமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வை ஆலய அருட்பணிசபை, ஆலய நிதிபரிபாலன சபை, வழிபாட்டுக்குழு, மரியாயின் சேனை, மறைகல்வி தமிழ் ஆசிரியர்கள் இணைந்து சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தார்கள்.

By admin