கனடா நாட்டின் லண்டன் ஒன்றாரியோ மறைமாவட்டத்தில் அமைந்துள்ள செபமாலை தாசர் சபையினரின் புனித செபமாலை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
செபமாலை தாசர் சபை அருட்தந்தையர்கள் செபஸ்டியன் வீனஸ், லியோனிஸ், கமல் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்று மதியம் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து திருச்செபமாலை பவனியும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் நற்கருணை ஆராதனையை திருவுள பணியாளர் சபை அருட்தந்தை டெவின் அவர்கள் நெறிப்படுத்தினார்.
இத்திருவிழாவில் கனடாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.