யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க திருமறைத்தேர்வு 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்டத்தில் 266 பாடசாலைகளில் நடைபெற்ற இத்தேர்வில் 14000ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் அதில் பங்குபற்றிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் 9ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மறைக்கல்வி நிலை இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.