மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மறைப்பாடசாலைக் கட்டடம் புனரமைக்கபட்ட நிலையில் அதன் திறப்பு விழா கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யூலியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்;பு மாவட்ட செயலர் திருமதி யுஸ்ரினா முரளிதரன் அவர்கள் கலந்து புனரமைப்புசெய்யப்பட்ட கட்டடத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்கள், மறைப்பாடசாலை மாணவர்களென பலரும் கலந்து கொண்டதுடன் இயேசுவின் வாழ்வை மையப்படுத்தி வரையப்பட்ட சுவர் ஓவியங்களும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு மாணவர்களால் அவைபற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஸ்ட மறையாசிரியர்கள் இருவருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.