ஒட்டகப்புலம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 36 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.