ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை அந்தோனிபுரம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யேசுதாசன் மற்றும் மறைமாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் இரண்டு பிரசீடியங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டு அவற்றிற்கான நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஊறணி பங்கைச் சேர்ந்த 20 வரையான அன்னையர்கள் பங்குபற்றியதுடன் புதிய நிர்வாகத்தெரிவை தொடர்ந்து பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிரமதானபணியும் மேற்கொள்ளப்பட்டது.