2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்பு பணிகள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மறைமாவட்டத்தில் இவ் ஆயத்தப்பணிகளின் 2ஆம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு வினாக்கொத்துக்கள் ஊடாக சேகரிக்கப்பட்ட தரவுகளை ஓழுங்குபடுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் கூட்டம் சூம் வலைத்தள செயலியுடாக 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆயத்தப்பணிகளுக்கு பொறுப்பான குருக்கள் துறவிகள் பொதுநிலையினருடன் பங்குத்தந்தையர்களும் இணைந்து கொண்டார்கள்.