இலங்கை தீவில் இனப்பிரச்சனைக்கான தீர்வை அடிமட்ட மக்களிடமிருந்து உருவாக்க வேண்டும். சமூக அக்கறைகொண்ட அனைவரும் இப்பணியை ஆற்ற முன்வர வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் உலகத்தமிழர் பேரவையும் சர்வமத குழுவினரும் இணைந்து மேற்கொண்ட சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலகத்தமிழர் பேரவை சர்வமத குழுவினருடன் இணைந்து பல தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்த நிலையில் 9ஆம் திகதி சனிக்கிழமை யாழ். ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களை சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தங்களின் நிரைப்பாடுகள் பற்றி கலந்துரையாடினார்கள்.
இக்கலந்துரையாடிலில் உலகத்தமிழர் பேரவையினர் “ஒவ்வொரு தனி நபரும் சமாதானத்துடனும் கௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை நாடு” எனும் தலைப்பில் ஆறு கூற்றுக்கள்அடங்கிய மகஜர் ஒன்றினை ஆயர் அவர்களிடம் கையளித்தனர்.
இக்கலந்துரையாடலில் பல்சமய தலைவர்களுடன் உலகத்தமிழர் பேரவை தலைவர்களென 18 வரையானவர்கள் கலந்து கொண்டனர்.