முல்லைத்தீவு புதுக்குடியிப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய பழைய மாணவர்களுக்கான உயிர்ப்பு ஞாயிறு வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக முல்லை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களும் மற்றும் முல்லை மறைக்கோட்ட குருக்கள், அருட்சகோதரிகள், பெற்றோர், மாணவர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தார்கள். இச்சுற்றுப் போட்டியில் பாடசாலையின் 11 பழைய மாணவ அணிகள் பங்குபற்றியிருந்நதன.