யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருத்துவக்கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைக்கோட்டத்தில் பணியாற்றும் துறவற சபைகளை சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்சகோதரர்களென 100ற்கும் அதிகமானவர்கள் இணைந்து கிறிஸ்மஸ் கரோல் கீதங்களை வழங்கினார்கள்.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.