உடுப்புக்குளம் குழந்தை யேசு ஆலயம் ஆரம்பமாகியதன் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வுகளும் ஆலயத்திருவிழாவும் 12ம் திகதி கடந்த சனிக்கிழமை அங்கு இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டது. உடுப்புக்குளம் புனித குழந்தை யேசு ஆலயம் அவ்விடத்தில் ஊருவாக அரும்பாடுபட்டு உழைத்த அமரர் எட்வேட் அவர்களின் நிiiவாக அவரின் துணைவியார் ஆயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் இந்நாளை நினைவுகூருமுகமாக வெள்ளிவிழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் அளம்பில் பங்குத்தந்தை அருட்திரு யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.