இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஆவணப்படமென்றினை அண்மையில் வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
இவ்ஆவணப்படம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் கருதினால் பேரருட்தந்தை மல்கம் றஞ்சித் அவர்களும் 6ஆம் திகதி புதன்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வறிக்கையில் கருதினால் அவர்கள் சனல் 4 தொலைக்காட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன் இவ்வாவணப்படத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மைகளை கண்டறிந்து அவற்றின் அடிப்படையில் குண்டுவெடிப்பு சம்மந்தமான விசாரணையை மேற்கொள்ள சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கபட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் தற்போதைய உள்ளக விசாரணைக்குழு உறுப்பினர்களின் வெளித்தொடர்புகளால் ஏற்படும் அழுத்தம் காரணமா அக்குழு நம்பகத்தன்மை இழந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கை நாட்டில் சமாதானமும் அமைதியும் நிலவ அன்னை மரியாவிடம் மன்றாடும் படியும் அழைப்புவிடுத்துள்ளார்.