உடையார்கட்டுப்பங்கில் நடைபெற்றுவரும் இளையோர் எழுச்சி மாதத்தினை முன்னிட்டு புனித யூதா ததோயு இளையோர் ஒன்றியத்தினாரல் பல செயற்பாடுகள்அங்கு முன்னெடுக்கப்பட்டவருகின்றன.

இளையோர்களை வலுப்படுத்தி அவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடனான தோழமை உணர்வை மேம்படுத்தும்
நோக்கோடு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் வழிநடத்தலில் இளையோர்களினால் முன்னெடுக்கப்படடுவரும் இந்நிகழ்வுகளில் இரத்ததானம், கடலோர துப்பரவுப்பணி, களதரிசிப்பு, முதியோர் மகிழ்வூட்டும் நிகழ்வு, சமூகத்தலைவர்கள், பெரியவர்களுடனான கலந்துரையாடல், பங்குமட்ட விளையாட்டுப்போட்டி, கலைநிகழ்வுகள் போன்றன இடம்பொறுகின்றன்.

கடந்த மாதம் 30ஆம் திகதி இளையோர் ஒன்றிய கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வுகளில் அன்றைய தினம் இரத்ததான முகாமும் தொடர்ந்த நாட்களில் பங்குமட்ட விளையாட்டு நிகழ்வுகளும் முதியோர் கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கள அனுபவ பயணமும் இடம்பெற்றது. கள அனுபவ பயணத்தில் இளையோர்கள் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தை தரிசித்து அங்கு நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் வழிகாட்டலில் அருட்தந்தை ஜெராட் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட “நேரான உளவியல்” எனும் தலைப்பிலமைந்த கருத்தமர்வில்
பங்குபற்றினார்கள்.

தொடர்ந்து எழுவைதீவுப் பங்கிற்கு களஅனுபவ பயணம் மேற்கொண்டு எழுவைதீவுப் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் உதவியுடன் அங்குள்ள இளையோருடன்
இணைந்து கலந்துரையாடல், கருத்துரைகள், அனுபவப் பகிர்வுகள் என்பவற்றுடன் நட்பு ரீதியான துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றினர்.

By admin