இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் ஒரு பகுதி மின்சார தேவையை பூர்த்தி செய்யும் முகமாக அமைக்கப்பட்டுவந்த சூரிய மின்சக்தி இணைப்பு வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் பிரான்ஸ் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. ராஜன் அவர்களும் கல்லூரியின் முன்னாள் அதிபர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் இளவாலை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
இங்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி இணைப்புக்கான அனுசரணையை கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரான்ஸ் கிளையினர் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin